செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி…! ED-க்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்…!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், 2023ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தனக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Vignesh

Next Post

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!! பரபரப்பை கிளப்பும் த.மா.கா. தேர்தல் அறிக்கை..!!

Mon Apr 1 , 2024
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதனை தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், முனவர் பாட்சா, ராஜம் எம்பி நாதன், சக்தி வடிவேல், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்று கொண்டனர். தேர்தல் அறிக்கையில், ”மழை வெள்ளக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து, தடுத்து பாசனத்திற்கு பயன்படுத்தும் தேசிய அளவிலான நதிகளை இணைக்கும் மத்திய […]

You May Like