இன்னும் 10 நாட்கள் தான் செந்தில் பாலாஜிக்கு கெடுவிதித்த நீதிமன்றம்…..! அரசு தரப்புக்கு பின்னடைவா…..?

செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 14ஆம் தேதி இரவு கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக தெரிவித்து, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதி மாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரதச்சக்கரவர்த்தி, நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் செந்தில் பாலாஜியை விடுதலை செய்யலாம் என்று நீதிபதியின் நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.

ஆனால் மற்றொரு நீதிபதியான பாரத சக்கரவர்த்தி இந்த மனு தள்ளுபடி செய்யக்கூடியது என்று தெரிவித்ததோடு, ஒரு நிமிடம் கூட செந்தில் பாலாஜி கஸ்டடி இல்லை என்றும் சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக கருத இயலாது என்றும் தீர்ப்பு வழங்கினார்.

அதேநேரம் செந்தில் பாலாஜி குணமடைந்த பிறகு அமலாக்கத்துறை தம்பி கஸ்டடியில் எடுத்து செந்தில் பாலாஜியை விசாரிக்கலாம் என தெரிவித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சிகிச்சை பெற்று வருகிறார். என்பதற்காகவே அவரை விடுவிக்க இயலாது தற்போதைய சூழ்நிலையில், காவிரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை தொடர்பாக மேலும் இன்றிலிருந்து பத்து நாட்கள் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் 10 நாட்களுக்குப் பிறகும் அவர் சிகிச்சை தர வேண்டிய சூழ்நிலை இருந்தால் சிறைத்துறை மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறலாம் என்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி நீதிபதிகளின் இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகளின் காரணமாக, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு செல்ல உள்ளது. 3வது நீதிபதி யார் என்பதை தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய இருக்கிறார். ஆகவே விரைவில் இந்த வழக்கு 3வது நீதிபதி முன்பு விசாரணைக்கு வரலாம்.

Next Post

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம்..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Jul 4 , 2023
தமிழ்நாட்டில் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளன. அதனால் பல்வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு முன்பு அரசுப் பள்ளியில் […]

You May Like