பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை..!!முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பு..!!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழங்க உள்ளது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூன் 16ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

பலமுறை வாதாட கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்த நிலையில், நீதிமன்ற எச்சரிக்கைக்கு பின்னர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் 5 நாட்கள் வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கடந்த 9 ஆம் தேதி இறுதி வாதத்தை முன் வைத்தார். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இன்று தீர்ப்பு வழங்கவுள்ளார்.

Chella

Next Post

ஜிபிஎஸ் மூலம் டோல் கட்டணம் வசூல்!… 6 மாதத்தில் கொண்டுவரப்படும்!… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

Mon Feb 12 , 2024
நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணை வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏராளமான சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்க பாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, பாஸ்டேக் இல்லாத வாகனங்களே இல்லை. […]

You May Like