சடலத்தோடு உறவு.. துண்டு துண்டாக வெட்டி சிதைத்த கொடூரம்! 10 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்த மர்மம்!

America 2026

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இளம் பெண் நடனக் கலைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சடலத்துடன் உறவு கொண்டு, உடற்பாகங்களை சிதைத்த அதிர்ச்சி வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண்ணுக்கு நீதிமன்றம் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவரது காதலனுக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை வழக்கின் முழுப் பின்னணியும் அம்பலமாகியுள்ளது.


தெற்கு டகோட்டா பகுதியைச் சேர்ந்த மோர்கன் பாயர் என்ற 19 வயது இளம் பெண், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய வாழ்க்கை மற்றும் வேலை வாய்ப்புகளைத் தேடி அட்லாண்டா பகுதிக்கு வந்துள்ளார். போதிய நண்பர்களோ அடைக்கலமோ இல்லாத நிலையில், உள்ளூர் கிளப் ஒன்றில் கவர்ச்சி நடனக் கலைஞராக பணியில் சேர்ந்தார். ஆனால், அங்கு வந்து சேர்ந்த வெறும் இரண்டு வாரங்களிலேயே, அதாவது பிப்ரவரி 25ஆம் தேதிக்கு பிறகு அவர் திடீரென மாயமானார். மகளைக் காணாமல் தவித்த அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் கெய்ன்ஸ்வில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் தொடக்கத்தில், அந்த கிளப்பில் மோர்கனுடன் பணியாற்றி நட்பான கேட்லின் கோபிள் மற்றும் அவரது காதலன் ஜொனாதன் அலெக்சாண்டர் வாரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தாங்கள் மோர்கனை தங்களது அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் காரில் வந்த வேறு ஒருவருடன் அவர் சென்றுவிட்டதாகவும் கூறி தம்பதியினர் நாடகமாடினர். கிளப் பணியாளர்களோ மோர்கன் இவர்களுடன்தான் கடைசியாக சென்றார் எனக் கூறினாலும், சடலம் எதுவும் கிடைக்காததாலும், பலவீனமான ஆதாரங்களாலும் பல ஆண்டுகளாக இந்த வழக்கு தேக்க நிலையிலேயே நீடித்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜார்ஜியா புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது மோர்கனின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இது வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதற்கிடையே தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த காதலன் வாரனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, நீதிமன்றத்தில் தாங்கள் செய்த அடுக்கடுக்கான கொடூரங்களை வாக்குமூலமாக அளித்தார்.

தொடர் கொலையாளிகளின் செயல்களால் ஈர்க்கப்பட்ட தங்களுக்கு, ஒருவரைத் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்ய வேண்டும் என்ற வக்கிர ஆசை இருந்ததாகவும், இதற்காகவே தனது காதலி கோபிள் வகுத்த திட்டத்தின்படி மோர்கனை அழைத்து வந்து கொலை செய்ததாகவும் வாரன் தெரிவித்தார். மேலும், உயிரிழந்த மோர்கனின் உடலுடன் உடலுறவு கொண்டதாகவும், உடலை துண்டு துண்டாக வெட்டி சிதைத்ததாகவும் அவர் பகீர் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் வாரனுக்கு ஏற்கனவே பரோல் இல்லா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதன்மைக் குற்றவாளியான கேட்லின் கோபிளுக்கும் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Read More : மேடையில் முதல்வர் விஜய் செய்த சம்பவம்! உற்று கவனித்த பிரதமர் மோடி!

Next Post

மயங்கிய பெண் தொழிலாளியை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலாத்காரம் செய்த வாலிபர்! திருப்பூரில் திடுக்கிடும் சம்பவம்!

Sun Oct 11 , 2026
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே உடல்நலக் குறைவால் மயக்கமடைந்த சக பெண் தொழிலாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மமிதா மொண்டல் மற்றும் அவரது மனைவி சாயந்தி தாஸ் ஆகியோர், திருப்பூர் அவிநாசிபாளையத்தை அடுத்த குப்பிச்சிபாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றி […]
rape 1

You May Like