ஆட்சியில் பங்கு.. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்..! ஆடிப்போன மு.க.ஸ்டாலின்.. என்ன செய்யப்போகிறார்..?

MK Stalin dmk 4

2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது.  இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் லேசாக சலசலப்பு எழத் தொடங்கி இருக்கிறது. அதாவது திமுகவுடன் பல ஆண்டுகள் கூட்டணியில் இருக்கும் நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனக் கோரிக்கையை சில தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். பல ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நிலையில் இந்தத் தேர்தலில் சற்று அழுத்தமாகவே தங்கள் குரலைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கேட்க மாட்டோம் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் இன்னும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக தெரிகிறது. 

Read more: முகம் தக தகனு மின்ன அரிசி மாவு ஃபேஸ்பேக்.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!

English Summary

Share in the government.. Alliance parties putting pressure on DMK..! What is MK Stalin going to do after being defeated..?

Next Post

Breaking : இன்றும் புதிய உச்சம்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Wed Oct 15 , 2025
The price of gold jewelry in Chennai has risen sharply again today, reaching a new high.
gold new

You May Like