“நான் வியந்து பார்த்த ஒரே ஸ்டார் அவர்தான்…” பிரபல நடிகை குறித்து குஷ்பூ பகிர்ந்த தகவல்..

images 30

தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா, மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் இன்னும் நீங்காத நினைவாக இருந்து வருகிறார். அவருடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் பலரும் அவ்வப்போது அவரைப் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.


அதில் பேசிய குஷ்பூ, திரையில் மட்டுமல்ல, நேரிலும் மிகவும் தன்னம்பிக்கையுடனும் இயல்பாகவும் இருக்கும் நடிகை சில்க் ஸ்மிதா தான் என்று கூறியுள்ளார். அவரது தோற்றமும், நடையும், தன்னம்பிக்கையும் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் அர்ஜுனுடன் நடித்த ஒரு திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததாக நினைவுகூர்ந்த குஷ்பூ, படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் “மேடம் வரப்போறாங்க” என்று கூறிக்கொண்டே இருப்பார்கள் என்றும், அப்போது யார் அந்த “மேடம்” என்று ஆவலுடன் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் சில்க் ஸ்மிதா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, அவருடைய ஆளுமையையும் கம்பீரமான தோற்றத்தையும் பார்த்து வியப்பில் ஆழ்ந்ததாக குஷ்பூ கூறியுள்ளார். இதுவரை ஒரு நடிகையை அந்த அளவுக்கு ஆச்சரியத்துடன் பார்த்தது சில்க் ஸ்மிதாவை மட்டும்தான் என்றும், அவரிடம் தனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்ததாகவும் குஷ்பூ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Also Read: இனி இந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிங்க… புற்றுநோய் அணுக்களைக் கூட வளர விடாமல் தடுக்குமாம்..

Saranya

Next Post

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 55 வயது நபருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை.. நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…

Mon Jul 20 , 2026
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக கவலைக்கிடமாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். உடல் மற்றும் மன ரீதியில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்தக் குற்றங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் மனநலத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, குழந்தைகளுக்கு “நல்ல தொடுதல் – கெட்ட தொடுதல்” (Good Touch, Bad Touch) குறித்து வயதுக்கு ஏற்ற முறையில் […]
0a6dd595c93df371aa5a7c531eede66c

You May Like