ஷாக்!. அரிய நோயால் 2 பேர் பலி!. 58 பேர் பாதிப்பு!. லெஜியோனேயர்ஸ் நோய் என்றால் என்ன?. அறிகுறிகள் இதோ!

Legionnaires disease 11zon

நியூயார்க்கில் ஹார்லெம் பகுதியில் லெஜியோனேயர்ஸ் நோயின் தாக்கத்தால் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த நோய்க்கு 58 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஹார்லெமில் வசிக்கும் பலரும் இருமல், காய்ச்சல், சளி, வலிகள் அல்லது மூச்சுத் திணறல் போன்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது நாள்பட்ட சுவாச நோய் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர், இதனால் எச்சரிக்கையாக இருக்குமாறு நியூயார்க் நகர சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.


லெஜியோனேயர்ஸ் நோய் என்றால் என்ன? லெஜியோனெல்லா பாக்டீரியா கெட்ட நீரில் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு நபர் அத்தகைய தண்ணீரைக் குடித்தால், அந்த நபருக்கு லெஜியோனேயர்ஸ் நோய் ஏற்படுகிறது. இது ஒரு வகை நிமோனியா ஆகும்.

பொதுவாக, இந்த நோய் நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் குணப்படுத்தப்படுகிறது. ஆனால் நுரையீரலில் அதிக தொற்று இருந்தால், ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால், அத்தகைய சூழ்நிலையில், மோசமடையலாம். எனவே அவர் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. கட்டிட நீர் அமைப்புகளில் பரவுகிறது. ஷவர்ஹெட்ஸ், ஹாட் டப்கள் மற்றும் கூலிங் டவர்கள் போன்ற இடங்களில் இவற்றைக் காணலாம். மேலும் இந்த நீரால் பிரசவத்தின்போது குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுவாக இருமல், காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை அறிகுறிகளாகும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன. செய்திகளின்படி, பதினொரு கோபுரங்களில் இந்த வெடிப்புக்கு காரணமான குறிப்பிட்ட வகை லெஜியோனெல்லா நிமோபிலா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

Readmore: உத்தரகாண்ட் மேக வெடிப்பு.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு.. மீட்புப் பணியில் இந்திய ராணுவம்..

KOKILA

Next Post

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை அகற்ற அஸ்திவாரம்...! நயினார் நாகேந்திரன் அதிரடி

Wed Aug 6 , 2025
நிர்வாக குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டிருந்தாலும் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நீர் இன்னும் முழுமையாக வந்து சேராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. […]
nainar nagendran mk Stalin 2025

You May Like