ஷாக்!… கிடுகிடுவென உயர்ந்த விலை!… கிலோவுக்கு ரூ.250 வரை அதிகரித்த மளிகைப் பொருட்கள்!

Groceries: தமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை தாறுமாறாக எகிறி உள்ளது. என்ன காரணம்? இந்த விலை உயர்வு எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பும் கவலையும் மக்களிடம் நிலவி வருகிறது.

ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, தமிழ்நாட்டுக்கு வரும் மளிகைப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்தநிலையில், கடந்த மாதத்துடன் மளிகைப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்கும்போது பருப்பு, மசாலா, உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது.

அதன்படி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சுண்டல், பட்டாணி மற்றும், மசாலா வகைகளில் மஞ்சள், மிளகாய், மல்லித்தூள் விலை கடந்த மாதத்தை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து இருக்கிறது. இதுதவிர, மிளகு, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், மிளகாய், மல்லி ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.50 வரை அதிகரித்து உள்ளது.

இதையடுத்து, கடந்த மாதம் ரூ.40-க்கு விற்கப்பட்ட சர்க்கரை, இந்த மாதம் ரூ.48-க்கு விற்பனை ஆகிறது. எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் வகைகள் லிட்டருக்கு ரூ.12 முதல் ரூ.30 வரை அதிகரித்து இருக்கிறது. ‘ரீபண்டாயில்’ எண்ணெயும் உயர்ந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டு விலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை ரூ.180 வரை விற்பனை ஆன பூண்டு, நேற்று ஒரு கிலோ ரூ.210 வரை விற்பனையாகிறது.

Kokila

Next Post

2ஜி அலைக்கற்றை வழக்கு: 2012 தீர்ப்பைமாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல்..!

Wed Apr 24 , 2024
பிப்ரவரி 2, 2012 அன்று வழங்கிய தீர்ப்பில், 2008 ஜனவரியில் தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ ராசா இருந்தபோது பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளில் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் 2017 டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பளித்தது. இது வழங்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாகியும், 2ஜி […]

You May Like