அதிர்ச்சி..!! திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர்..!! என்ன காரணம்..? சோகத்தில் திமுகவினர்..!!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 39 மற்றும் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு அமைச்சருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதை அவர்கள் தீவிரமாக கண்காணித்து மாவட்டச் செயலாளருடன் இணைந்து வேட்பாளருக்காக வேலை செய்து வருகின்றனர். இரவு பகலாக அமைச்சர்கள் பணியாற்றி வரும் நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : Gold Rate | வரலாறு காணாத உச்சம்..!! ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Chella

Next Post

’முதல்வர் எழுப்பிய 3 கேள்விகள்’..!! ’பதில் சொல்லுங்க மோடி’..!! வைரலாகும் எக்ஸ் தள பதிவு..!!

Mon Apr 1 , 2024
பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பது… பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து விட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்று தான். கேள்வி 1 : தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் […]

You May Like