தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி வரை கடையடைப்பு…! தமிழக வணிகர் சங்க பேரவை அறிவிப்பு…!

shop close 2025

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்ததைக் கண்டித்தும், அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழப்பை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் இன்று கடைகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மருந்துக் கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மரணத்துக்கு முன் மூளையில் என்ன நடக்கும்?. நீண்ட கால புதிருக்கு கிடைத்த விடை!. திடுக்கிடும் உண்மை!.

Mon Sep 29 , 2025
மரணத்துக்கு முன் மூளையில் என்ன நடக்கிறது என்ற மனித குலத்தின் நீண்டகால புதிருக்கு லூயிஸ்வில்லி யுனிவர்சிடியின் லேட்டஸ்ட் ஆய்வில் விடைக் கிடைதுள்ளது. வாழ்க்கையின் முற்றுப்புள்ளிதான் மரணம். தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டும் என்பது நியதி. பிறக்கும்போதே ஒவ்வொரு மனிதனுக்கும் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கிவிடுகிறது. ஆனால் மரண நாள் தெரியாததால் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக-நிம்மதியாக வாழ்கிறோம். இறுதி நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்பதால்தான், மனிதனுக்கு […]
brain before death

You May Like