ஷாக்…! SIR திருத்தம்… தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்கள் வரை நீக்க வாய்ப்பு…!

voter id aadhar link 11zon

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது.


2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,99,72,687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,95,03,855 கணக்கெடுப்பு படிவங்கள் (99.95%) இதுவரை (2025 டிசம்பர் 8) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,33,096 வாக்குச் சாவடி அலுவலர்கள், 12,43,716 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,40,59,971 கணக்கெடுப்பு படிவங்கள் (99.91%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6,36,44,038 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 10,21,404 படிவங்கள் (99.98%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,20,557 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் இறந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்குரிமை வைத்திருப்பவர்கள், குடிப்பெயர்ந்தவர்கள் போன்றவர்கள் என மொத்தம் 80 லட்சம் முதல் 1 கோடி வாக்காளர்கள் வரை நீக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Vignesh

Next Post

மெரினா கடற்கரையில் தலை இல்லாத பெண் சடலம்.. சென்னையை அதிர வைத்த பகீர் சம்பவம்..!

Tue Dec 9 , 2025
A headless body of a woman washed ashore on Marina beach.. A horrific incident that shook Chennai..!
merina deadbody

You May Like