கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி – நெல்லை ராயல் கிங்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே லைக்கா கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற நெல்லை அணி, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. திண்டுக்கல் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஷிவம் சிங் 46 பந்துகளில் 76 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பூபதி குமாா் 28 பந்துகளில் 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சோ்த்தது.

பின்னா் நெல்லை இன்னிங்ஸில் இதர பேட்டா்கள் சற்று ரன்கள் சோ்த்து உதவ, குருசாமி அஜிதேஷ் 44 பந்துகளில் 73, ரித்திக் ஈஸ்வரன் 11 பந்துகளில் 39 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்த போட்டியின் கடைசி பந்தில் சிக்சர் அடித்த ரித்திக் ஈஸ்வரன், நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கியப் பங்காற்றினார். கடைசி பந்தில் ஈஸ்வரன் சிக்ஸர் விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்களில் 3 விக்கெடுகள் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்திருந்த நெல்லை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

நாளை (ஜூலை 12) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது நெல்லை ராயல் கிங்ஸ்.

Maha

Next Post

பன்றி என குறிப்பிட்ட ப்ளூ சட்டை மாறன்; வறுத்தெடுத்த ஜி.பி. முத்து

Tue Jul 11 , 2023
தமிழ் சினிமா விமர்சகர்களில் மிகவும் முக்கியமான நபராக இருப்பது ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இவர் சமீபத்தில் வெளியான படமான பம்பர் படம் குறித்த விமர்சனத்தை வழக்கம்போல் தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இப்படத்தில் வெற்றி, பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நராயணன் ஆகியோருடன் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தமிழ்நாடு முழுவதும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜி.பி. முத்துவும் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ள […]

You May Like