34,635 மாணவர்களுக்கு ஐசிடி அகாடமி மூலம் திறன் பயிற்சி… அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சூப்பர் தகவல்…!

Tn Govt 2025

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஐசிடி அகாடமி மூலம் திறன் பயிற்சி வழங்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் (ஐசிடி அகாடமி), மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள் – கல்லூரிகளின் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த 7,533 ஆசிரியர்களுக்கு 252 பயிற்சி திட்டங்கள் மூலம் தொழில்நுட்பம், மென்திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், தொழில் சார்ந்த திறன்களை மேம்படுத்த 34,635 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் முனைவோர் மேம்பாட்டுக்காக தமிழகம் முழுவதும் 153 கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 23,827 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

இதற்கிடையே, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப திறன்கள், தலைமை பண்புகள், சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறன்கள் ஆகியவற்றை இளைஞர்களிடம் வளர்த்தெடுக்கும் வகையிலான முன்னெடுப்புகளை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து ஐசிடி அகாடமி மேற்கொண்டு வருகிறது. மைக்ரோசாஃப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘லேர்னத்தான் 2024’, யுஐபாத் நிறுவனத்துடன் ‘ஸ்கில்-ஏ-தான் 2024’, ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் ‘இந்தியா டிசைன் வீக் போட்டி’, இளைஞர் தலைமை உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ‘இளைஞர் பேச்சு 2024’, கேஒய்என்.ஹுட் நிறுவனத்துடன் ‘கினொவேட் 2025’, ஒபென்வீவெர் நிறுவனத்துடன் இணைந்து தேசிய அளவிலான ‘கம்ப்யூட்டர் கோடிங்’ போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: மனை விவரங்களை பதிவு செய்ய புதிய வெப்சைட்.. தமிழ்நாடு அரசு அசத்தல்..!! இனி வேலை ஈஸியா முடிஞ்சிடும்..

Vignesh

Next Post

ஷாக்!. நாட்டில் அதிகரிக்கும் வேலையின்மை!. சராசரி விகிதம் 5.6%ஆக உயர்வு!. பெண்களின் நிலைமை மிக மோசம்!

Tue Jun 17 , 2025
நகரங்களில் வேலையின்மை விகிதம் 17.2% லிருந்து 17.9% ஆக அதிகரித்துள்ளது. கிராமங்களிலும் இந்த எண்ணிக்கை 12.3% லிருந்து 13.7% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேலையின்மை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மே 2025 இல், நாட்டின் சராசரி வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக அதிகரித்தது, அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் இது 5.1 சதவீதமாக இருந்தது. இது 15 முதல் 29 வயதுடைய இளைஞர்களை அதிகம் பாதித்துள்ளது. அவர்களில் வேலையின்மை விகிதம் […]
Unemployment 11zon

You May Like