Holiday: தொடர் விடுமுறை முன்னிட்டு… சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

Bus 2025

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 20.06.2025 (வெள்ளிக்கிழமை) அன்று 275 பேருந்துகளும், 21.06.2025 (சனிக்கிழமை) 320 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 20.0.2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 21.06.2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 20.06.2025 மற்றும் 21.06.2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது . இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,192 பயணிகளும் சனிக்கிழமை 2,906 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,310 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: “பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி; போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு என்பதே இல்லை”!. பிரதமர் மோடி!.

Vignesh

Next Post

விமான விபத்து எதிரொலி!. புதிய விதிகள் அமல்!. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடி!.

Thu Jun 19 , 2025
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு , விமான நிலையங்களுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள விமானப் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வரைவு விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் முன்மொழியப்பட்ட விமான விதிகள், நேற்று (ஜூன் 18) அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட விமான நிலைய மண்டலங்களில் உயர வரம்புகளை மீறும் […]
flight new rules

You May Like