ஆதரவற்ற பெண்களுக்கு.. வரும் 9 முதல் 18-ம் தேதி வரை சிறப்பு முகாம்…! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

womens 2025

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம்பெண்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” உருவாக்கப்பட்டுள்ளது.


கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் மாவட்ட உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வாரியாக பேரிளம்பெண்கள் விவரங்களை சேகரிப்பதற்கு ஏதுவாக வாரியத்திற்கென www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற வலைபயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே வலைபயன்பாட்டில் (Web Application) உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் 09.06.2025 அன்று தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டாரங்களில், 11.06.2025 அன்று காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு வட்டாரங்களில், 13.06.2025 அன்று மொரப்பூர் மற்றும் கடத்தூர் வட்டாரங்களில், 16.06.2025 அன்று பென்னாகரம் மற்றும் ஏரியூர் வட்டாரங்களில், 18.06.2025 அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களிலும், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவைச்சான்று /கணவனால் கைவிடப்பட்ட சான்று, அலைப்பேசி (Mobile Phone) கொண்டு வர வேண்டும். மேற்படி முகாமில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம்பெண்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

Read More: நோட்..! 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

Vignesh

Next Post

தொகுதி மறுவரையறை ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது..! முதல்வர் ஸ்டாலின் கருத்து...!

Sat Jun 7 , 2025
தொகுதி மறுவரையறை தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என‌ முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. மத்திய பா.ஜ.க. […]
MK Stalin dmk 6

You May Like