தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. வெப்ப அலை வீசி வருவதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து குறைந்தால், நீர் மோர், இளநீர், எலுமிச்சை சாறு போன்ற திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டு, இலகுவான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது..
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.. அதன்படி அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது..
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் இலவசமாக இந்த கரைசலை வாங்கிக் கொள்ளலாம என அறிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் விவசாய கூலித் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது..
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் Heat Stroke என சிறப்பு வார்டு அமைக்கவும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது..
இத்துடன் Heat Stroke காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : கேஸ் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..! மே 1 முதல் புதிய விதிகள்.. முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகள்..!



