மாஸ்..! மரக்கன்றுகள் நடும் மாணவர்களுக்கு தனி மதிப்பெண்…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

tn govt 2025 3

மாணவர்கள் மரக்கன்றுகள் நட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழல் பகுதிகளில் நட வேண்டும். அவ்வாறு மரக்கன்றை நட்டுவைத்த பின்னர் தாய் மற்றும் பாதுகாவலருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை https://ecoclubs.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளி அளவில் மகிழ்முற்றம் குழுக்கள் அடிப்படையில் போட்டித் தன்மையை உருவாக்கி, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் பங்கேற்புக்கு மதிப்பெண்கள் வழங்கியும் ஊக்குவிக்க வேண்டும்.

இதற்கான மரக்கன்றுகளை மாவட்ட பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழுவினர் வனத்துறையுடன் இணைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...!

Tue Sep 9 , 2025
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஜூன் 3-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாக உறுப்பினர் சேர்க்கை பணிகளைத் தொடங்கி வைத்தார். இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி வாயிலாக விருப்பம் உள்ளவர்களை […]
MK Stalin dmk 1

You May Like