பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம்… 82 ஆட்சேப மனுக்கள்…! தேர்தல் ஆணையம் விளக்கம்…!

voter id aadhar link 11zon

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து 79 மற்றும் ராஷ்ட்டீரிய ஜனதா தள் கட்சியிடமிருந்து 3 ஆட்சேபம் மற்றும் உரிமைக் கோரல் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் மூலமாக இதுவரை 82 உரிமைக்கோரல் அல்லது ஆட்சேப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. நேரடியாக 1,95,802 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் பெறப்பட்டன. இவற்றில் 24,991 நேர்வுகள் 7 நாட்களுக்கு பின் பைசல் செய்யப்பட்டன.

18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து 8,51,788 படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் அவற்றில் 37,050 படிவங்கள் பைசல் செய்யப்பட்டதாகவும் எஞ்சியுள்ள படிவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2025 ஆகஸ்ட் 01 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் நகல் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத காரணங்கள் தெரிவித்து அந்தப் பட்டியல் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் தேடும் வகையில் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களின், இணையதளங்களில் (மாவட்ட வாரியாக) வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் உரிமை கோரல்களை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்கலாம்.

Vignesh

Next Post

பெண்களே மீண்டும் வந்தாச்சு அறிவிப்பு..!! இளஞ்சிவப்பு ஆட்டோ..!! விண்ணப்பிக்க ரெடியா..? கடைசி தேதி இதுதான்..!!

Fri Aug 29 , 2025
தமிழ்நாடு பெண்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டம் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் […]
Pink Auto 2025

You May Like