வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம். நடைபெற உள்ளது. மத சார்பற்ற கூட்டணி சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் உள்ள 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் வருகிற 4ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது, கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல.
எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டினார்.
இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும். இது தமிழ்நாட்டுக்கான பிரச்னை ஆகும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் 4 தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம். நடைபெற உள்ளது. மத சார்பற்ற கூட்டணி சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் உள்ள 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



