இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்..! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

திருச்சி மற்றும் காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருச்சி – காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. திருச்சி – காரைக்குடி சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி – திருச்சி சிறப்பு ரயில் (06888) ஜூலை 18 மற்றும் 19ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்..! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

தற்போது பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்களை முன்கூட்டியே இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, திருச்சி – காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி – திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி -காரைக்குடி ரயில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி-திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்பட மாட்டாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Chella

Next Post

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்..! புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..! - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

Sun Jul 10 , 2022
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமித்தல், வினியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் குச்சிகள், கொடிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘பாலீஸ்டைரீன்’ என்ற தெர்மாகோல் ஆகியவற்றுக்கு […]
பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? இல்லையா? - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

You May Like