டேஸ்ட்டான, ஈஸியான பெப்பர் சிக்கன் ரெசிபி வேண்டுமா.? இப்படி டிரை பன்னுங்க..!

தேவையான பொருட்கள்;


கோழி – 1 கி

நல்லெண்ணெய்-  3 டீ ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 3 டீ ஸ்பூன்

வெங்காயம்- 3

மஞ்சள் பொடி – ½ டீ ஸ்பூன்

வறுத்து அறைக்க;

முழு மிளகு – 2 டீ ஸ்பூன் 

சீரகம் –  1 ½  டீ ஸ்பூன்

சோம்பு  – 1 ½ டீ ஸ்பூன்

வரமிளகாய் – 5 டீ ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் – 3 டீ ஸ்பூன் 

முழு மல்லி – 2 டீ ஸ்பூன்

செய்முறை:

மேல்கூறிய பொருட்களை அடுப்பில் கடாய் வைத்து  குறைவான தீயில் பொன்னிறமாக வருத்து பொடி செய்துகொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை  வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மணம் வரை வதக்கியப்பின் கழுவி சுத்தம் செய்த கோழியை அதில் போட்டு வதக்கவும். வெட்டிவைத்த வெங்காயத்தை எண்ணத்தில் பொன்னிறமாக வறுத்து ஆறியபின் மிக்சியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை வதங்கிய கோழியில் சேர்த்து  நன்றாக திருப்பி விட்டு கிளறி,  மஞ்சள் பொடி சிறிதளவு சேர்த்து வதக்கி தேவையான உப்பும் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா பொடிகளை சேர்த்து சிறிது நேரம் திறந்து வைத்து வதக்கி மசாலா கோழியில் சேர்ந்ததும் சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்து கிரேவி பதம் வரும் வரை சுருள கிளறி விடவும் கடைசியில் மல்லி இலை தூவி இறக்கினால்பெப்பர் சிக்கன் தயார்!

1newsnationuser5

Next Post

அப்படி போடு...! இந்த வயதில் திருமணம் செய்தால் அது பாலியல் குற்றம் தான்...! இது வரை 4,004 வழக்கு பதிவு...! முழு விவரம் உள்ளே...

Fri Feb 3 , 2023
18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்ததாக கூறி அசாம் மாநிலத்தில் மொத்தம் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணங்களுக்கு எதிரான பெரும் நடவடிக்கையில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அது போன்ற நபர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் மொத்தம் 4,004 குழந்தை […]
காலையில் அண்ணனுடன்..!! அப்புறம் தம்பியுடன்..!! திருமணம் முடிந்த கையோடு அரங்கேறிய சம்பவம்..!!

You May Like