fbpx

இங்கிலாந்து வெறித்தனமான ஆட்டம் !! இந்திய வீரர் காயம் …

டி20 அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் இங்கிலாந்து தொடக்கம் முதலே வெறித்தனமாக விளையாடி வருகின்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் எடுத்த நிலையில் 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஜோஸ் பட்லரும் அலெக்ஸ் ஹெல்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஒரு விக்கெட்டாவது இழப்பார்களா என இந்தியா பவுலிங்கை இங்கிலாந்து சிக்சர் சிக்சராக மாற்றியது.

தொடக்கத்தில் இருந்தே வெறித்தனமான ஆட்டத்தை நம்மால் காணமுடிந்தது. எந்த பந்து போட்டாலும் பவுண்டரி, சிக்ஸ் என விளாசு விளாசென விளாசினர். 70 ரன்களை கடந்தும் ஒரு விக்கெட் கூட இந்திய வீரர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு  அதிருப்தியை ஏற்படுத்தியது.

9 ஓவர் முடிவடைந்த நிலையில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு என்ன ஆனதோ என சலசலப்பு ஏற்பட்டது. சக வீரர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். இதன் பின்னர் ஆட்டம் தொடங்கியது. அடிலைடு மைதானத்தில் சீறி சீறி பாய்ந்து விளையாடிய இங்கிலாந்து 10 ஓவரில் 97 ரன்கள் குவித்துள்ளது. ஜோஸ் பட்லர் 6 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்துள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸ் அரை சதம் அடித்து 5 சிக்கர்கள் விளாசி 2 பவுண்டரியுடன் 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

Next Post

தெறிக்க விட்ட இங்கிலாந்து…இந்தியா படு தோல்வி!!

Thu Nov 10 , 2022
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிக்கர் மழையாக பொழிந்த இங்கிலாந்து16 ஓவர்களிலேயே 170 ரன்கள் குவித்து இந்தியா படு தோல்வியடையச் செய்தது.  டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விளையாட்டை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் அவுட் ஆனதால் ரசிர்களிடையே பீதியை கிளப்பியது. 5 ரன்கள் எடுத்த […]

You May Like