fbpx

நாளை தொடங்குகின்றது இந்தியா-நியூசி. டி20 போட்டிகள் : முழு அட்டவணை இதோ…!!

நியூசிலாந்து – இந்தியா மோதும் முதல் டி20 போட்டி நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்குகின்றது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் மூத்த வீரர் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். இதேபோல், ஒருநாள் அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நிறைவடைந்த ஐ.சி.சி. டி.20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதில் இங்கிலாந்துடன் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இந்தியாவுடனான போட்டி வெற்றியை நோக்கிய விறுவிறுப்பை கொடுக்கும்.

இந்தியா-நியூசி டி20 அட்டவணை

1வது டி20 – நவம்பர் 18 மதியம் 12.00 வெலிங்டன்

2-வது டி20 –நவம்பர் 20 , மதியம் 12.00 மவுண்ட்,

3வது டி.20 நவம்பர் 22- மதியம் 12.00 நேப்பியர் மெக்லீன் பூங்கா

நியூசிலாந்துக்கு எதிராக, இந்தியா தனது முதல் டி20 போட்டியை நாளை, வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2022 அன்று மதியம் 12 மணிக்கு விளையாடுகிறது. இது நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் பிராந்திய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில், 18 நவம்பர் 2022 அன்று பிற்பகல் 12 மணி முதல் இந்தியா – நியூசிலாந்து டி20 மோதலின் நேரடி போட்டியை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு மட்டுமே உரிமை உள்ளது. நியூசிலாந்துக்கான இந்திய சுற்றுப்பயணத்தின் கிரிக்கெட் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த போட்டியின் கவரேஜ் 11 மணிக்கு தொடங்கும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ அறிவித்துள்ளது.

Next Post

புதிய தகவல்: செலவுகளை சமாளிக்க பணத்தால் அஃதாப்-ஷ்ரத்தா இடையே தகராறு!!

Thu Nov 17 , 2022
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 28 வயது இளம்பெண்ணான ஷ்ரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்து 35 கூறுகளாக்கி காட்டுப்பகுதியில் வீசினான். இந்த வழக்கில் அஃப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட பின் ஷ்ரத்தாவை எங்கு வைப்பது என்று தெரியாமல் 300 லிட்டர் ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளான். அதில் 35 கூறுகளாக உடலை வெட்டி பதப்படுத்தி […]
ஷ்ரத்தா கொலை வழக்கு..!! கணிக்க முடியாத நகர்வுகள்..!! காதலன் அப்தாப் குறித்து சிறை அதிகாரி பகீர் தகவல்..!!

You May Like