fbpx

மலடா.. அண்ணாமலை..!! சிஎஸ்கே வீரரின் பஞ்ச் டயலாக் வீடியோ வைரல்..!!

ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று டெல்லி அணியுடன் சென்னை அணி மோதியது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் சென்னை அணி களம் கண்டது.

அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ருதுராஜ் – கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் விளாசியது. ருதுராஜ் 79 ரன்கள், கான்வே 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி வரை போராடிய டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் 86 ரன்கள் அடித்தார்.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி சார்பில் அதிகபட்சமாக கான்வே அதிரடியாக விளையாடி 87 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், சிஎஸ்கே வீரர் கான்வே ‘மலடா அண்ணாமலை…’ என பஞ்ச் டயலாக் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன் தொடங்கியது…..! திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம்….!

Sun May 21 , 2023
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் முதலமைச்சரின் வெளிநாடு பயணம், கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like