fbpx

MS Dhoni | 3-வது படிக்கும் தோனியின் மகள்..!! பள்ளி கட்டணம் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா..?

இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் எம்.எஸ்.தோனி. ஐசிசி உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை பெற்றுக் கொடுத்தவர். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 16-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக டைட்டில் வென்றது.

எம்.எஸ்.தோனி கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்‌ஷியை திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி மற்றும் சாக்‌ஷி தோனிக்கு கடந்த 2015 பிப்ரவரி 6ஆம் தேதி ஷிவா பிறந்தாள். ஷிவா தோனியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். கடந்த சில தினங்களாக தோனி பற்றிய செய்தி வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தான் மற்றொரு செய்தியும் வெளியாகியிருக்கிறது. அதாவது, தோனி தனது மகளின் படிப்பு செலவிற்கு மட்டும் வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிறந்த பள்ளிகளில் டௌரியன் வேர்ல்டு ஸ்கூல் ஒன்று. சிறந்த பள்ளி என்ற அடைமொழியுடன் இந்தப் பள்ளியில் கட்டணமும் அதிகம். தன் மகள் கல்வியிலோ, விளையாட்டிலோ அல்லது கலையிலோ பின்தங்கியிருப்பதை தோனி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர் நன்றாக வளர அனைத்து வளங்களையும் இந்தப் பள்ளி வழங்குகிறது. டௌரியன் வேர்ல்ட் ஸ்கூலின் இலவசக் கட்டமைப்பின்படி, பள்ளியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால், 2 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,75,000 செலுத்த வேண்டும். தற்போது ஷிவா 3-வது படிக்கிறார். அவருக்கு மாதந்தோறும் ரூ.23 ஆயிரம் கட்டணம். அதன்படிபார்த்தால் தோனி, தனது மகள் ஜிவாவின் படிப்பு செலவுக்கு ரூ.2,76,000 கட்டணமாக செலுத்துகிறார். இதுவே, இந்த பள்ளியின் போர்டிங் திட்டத்தில் ஷிவா இருந்திருந்தால், தோனி தனது பள்ளிக் கட்டணமாக வருடத்திற்கு 4,40,000 ரூபாய் செலுத்துவார் என்பதை மறந்துவிடக் கூடாது. இதற்கிடையே, தோனியின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.1,040 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……! மகிழ்ச்சியில் காவலர்கள்……!

Sat Aug 5 , 2023
தமிழக அரசு சார்பாக அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, அவர்களை அவ்வப்போது மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது தமிழக அரசு. இதனால், தமிழக அரசின் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இப்படி பல்வேறு நன்மைகளை அரசு அதிகாரிகளுக்கு செய்வதால், அரசு பணிகளில் அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அனைத்து வேலைகளும் குறித்த நேரத்தில் முடிப்பார்கள் என்பதே முதல்வரின் கணக்காக இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், […]

You May Like