Breaking: 21 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 2 விசைப்படகுகளுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருந்தார், இப்பிரச்னைக்குத் தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டுமென்றும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Vignesh

Next Post

கட்டுக்கட்டாக பணம்!… சென்னையில் ரூ.1.42 கோடி Hawala பணம் பறிமுதல்!… தேர்தல் தேதி அறிவிப்பட்ட முதல்நாளே அதிர்ச்சி!

Sun Mar 17 , 2024
Hawala: சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் அலுவலகம் ஒன்றில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என […]

You May Like