“போதைபொருள் மூலம் ஆதாயம் தேடுவது தான் ஸ்டாலின் குடும்பம்” – நிர்மலா சீதாராமன் பேச்சு

போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ஓசூரில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

ஓசூர் ராம்நகரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், திமுக.,வைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணகிரி பற்றியோ, ஒசூரை பற்றியோ பார்லிமென்டில் பேசினார்களா என்பது பெரிய கேள்விக்குறி. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், மத்திய பா.ஜ., அரசு பலவித திட்டங்கள் மூலமாக மக்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்கள் செய்துள்ளது.

முத்ரா திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.5,427 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 2.75 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 18,600 பேருக்கும், நகர்ப்புறத்தில் 7,460 பேருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2.35 லட்சம் குடும்பங்கள் பலன்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் வந்து செல்லும் பறவை போல தமிழக முதல்வர் கூறுகிறார். மைக்ரேட் பேர்ட் (Migrate Bird) என்ற வார்த்தையே தவறு. நாட்டில் உள்ள யாரும் எங்கும் செல்லலாம். ஆனால், தமிழத்துக்கு பிரதமர் வந்து சென்றால் ‘மைக்ரேட் பேர்ட்ஸ்’ என செல்கிற அளவுக்கு நமது முதல்வரின் நிலைமை உள்ளது. தமிழகத்துக்கு பிரதமர் ஒவ்வெரு முறையும் வரும்போது பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால், பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டித் திரும்பி போ என செல்கிற அவர்கள் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி என வரும்போது கலெக்‌ஷனுக்கு மட்டும் வருகிறார்கள்.

தமிழகத்தில் மதுவைக் கொண்டு வந்ததால் குடிப்பழக்கத்தால் எத்தனை குடும்பங்கள் கஷ்டபடுகிறார்கள். இம்மாநில மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு நல்ல வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக, போதைப் பொருட்களை இறக்குமதி செய்து தமிழகத்தில் விற்கப்படுகிறது. இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். போதைப்பொருள் கடத்தல் வழங்கில் கைதான ஜாபர் சாதிக், அந்த குடும்பத்துடன் நேரடி தொடர்பு வைத்துள்ளார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

போதைப் பொருட்கள் மூலம் ஆதாயம் வைத்துக்கொண்டு அரசியல் செய்யக் கூடிய குடும்பத்தை இந்தத் தேர்தலில் நாம் நிராகரித்து தோற்க்கடிக்க வேண்டும். உதயசூரியன் அவர்களது குடும்பத்துக்கு உதிக்கிறோதோ இல்லையோ தமிழகத்துக்கு உதிக்கக் கூடாது. கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வு மலர வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்” என்று அவர் பேசினார்.

Next Post

பெண்களே செம குட் நியூஸ்..!! வரும் 15ஆம் தேதி உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 வந்துவிடும்..!!

Fri Apr 12 , 2024
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) அன்று தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது, மக்களவை தேர்தலுக்கான விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.1,000 உரிமைத்தொகை வருமா..? என்ற சந்தேகம் அனைத்து பெண்கள் மத்தியிலும் எழுந்து வந்தது. ஆனால், பணம் கொடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் […]

You May Like