தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது..
முதல்வர் ஸ்டாலின் இதுவரை 7 முறை தேர்தல் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.. 1989, 1996, 2001, 2006 தேர்தல்களில் போட்டியிட்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மு,க ஸ்டாலின் வெற்றி பெற்றார்.. சென்னை கொளத்தூர் தொகுதியில் 2011, 2021, 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்..
இந்த சூழலில் 2026 தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் 4-வது முறையாக போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.. முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் தோற்திருக்கக் கூடாது என்று திமுக தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் விமர்சர்களும் மாற்றுக் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
ஏனெனில் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு எண்ணற்ற நலத்திடங்களை முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார்.. கொளத்தூர் தொகுதியை மேம்படுத்திய முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த மக்களை சமூக வலைதளங்களில் பலரும் சாடி வருகின்றனர்..
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மு.க ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.. தனக்கு வாக்களித்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கு வாகனத்தில் சென்றவாறு நன்றி தெரிவித்து வருகிறார்.. ஸ்டாலின் தோல்வி அடைந்ததற்காக வழி நெடுகிலும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.. கண்ணீர் சிந்தும் மக்களுக்கு ஆறுதல் கூறிய படியே மேயர் சிட்டிபாபு பாலம் முதல் பெரவள்ளூர் சதுக்கம் வரை முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார்..
கொளத்தூர் தொகுதிக்கு பார்த்து பார்த்து செய்து வந்த முதலமைச்சர் தோற்றுவிட்டாரே என்று திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும் கண்ணீர் விட்டு அழுதனர்.. அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பல நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்ணீர் விட்டு கதறினர்.. முதல்வர் ஸ்டாலின் தோற்றதால் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் கண்ணீர் விட்டு கதறியது காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..



