களத்தில் இறங்கிய ஸ்டாலின்!… ஆந்திர முதல்வர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!… வன்முறை செய்யாதீர்கள் என ட்வீட்!

Andhra: தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் மக்களவை தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர முதலமைச்சரும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஜெகன் மோகன் ரெட்டி தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில், பேருந்தில் பயணித்துக் கொண்டே தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து கொண்டு, கற்கள் மூலம் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இதனால், முதலமைச்சர் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி அளித்தனர். இதையடுத்து மீண்டும் தேர்தல் பயண யாத்திரையை தொடர்ந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனங்கள். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Readmore: தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்!… சுவாச நோயாளிகளிடையே மரணத்தை ஏற்படுத்தும்!… ஆய்வில் அதிர்ச்சி!

Kokila

Next Post

இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் பதற்றம்: மோதலை குறைக்க இந்தியா அழைப்பு..!

Sun Apr 14 , 2024
ஈரான் இஸ்ரேல் போர் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை […]

You May Like