’இன்னும் எங்களுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வரல’..!! ஆ.ராசாவை முற்றுகையிட்ட பெண்கள்..!!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நீலகிரி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், அன்னூர் அருகே கெம்ப நாயக்கன்பாளையம் கிராமத்தில் ஆ.ராசாவின் பிரச்சார நிகழ்வையொட்டி அங்கு ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

பிற்பகலில் கெம்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு வந்த ஆ.ராசா அங்கு கூடியிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த பெண்கள் சிலர், வேட்பாளர் ஆ‌.ராசாவை முற்றுகையிட்டு, தங்களுக்கு 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என புகார் அளித்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தற்போது எதுவும் செய்ய முடியாது என அவர்களுக்கு பதிலளித்த ஆ.ராசா, தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

முதல்வர் ஸ்டாலினே அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்குவதாக சொல்லிவிட்டார் என்று கூறி அவர் சமாதானப்படுத்தினார். மகளிர் உரிமைத் தொகை கேட்டு பெண்கள் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Read More : தமிழ்நாட்டில் கட்சி வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! இத்தனை சுயேட்சை வேட்பாளர்களா..?

Chella

Next Post

’அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுக தான் காரணம்’..!! ’காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்’..!! அண்ணாமலை அதிரடி..!!

Mon Apr 1 , 2024
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் அரசு எங்களை கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறுவது கட்டுக்கதை. திமுகவினர் தமிழக மக்களை வஞ்சித்து இருக்கின்றனர். அப்போதைய மத்திய அமைச்சர் கேவல்சிங் கலைஞர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற பின்னரே, கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது. கருணாநிதி […]

You May Like