மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று… இன்று இடி, மின்னலுடன் மழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain

தமிழகத்தில் 6-ம் தேதி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது மேலும் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா பகுதிகளை நாளை கடந்து செல்லக்கூடும்.


இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 6-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 35.6 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், வட தமிழக கடல்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

சூடானில் போராலும் பசியாலும் போராடும் மக்கள்!. தஞ்சமடைந்தவர்களை விட்டுவைக்காத நிலச்சரிவு அரக்கன்!. மீளா துயரம்!.

Wed Sep 3 , 2025
மேற்கு சூடானின் டார்ஃபர் பகுதியில் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த பயங்கர விபத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஆகஸ்ட் 31 அன்று மர்ரா மலைகள் பகுதியில் நடந்தது, அங்கு பல நாட்களாக கனமழை பெய்து வந்தது. சூடான் விடுதலை இயக்கம்/இராணுவம் திங்கள்கிழமை (செப்டம்பர் 2) ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது. இந்த கொடூரமான துயரச் சம்பவத்தில் முழு கிராமமும் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் மட்டுமே உயிர் […]
sudan landslide 11zon

You May Like