“அவல நிலையில் மாணவர் விடுதிகள்.. பெயரை மாற்றி விளையாட்டு காட்டும் ஸ்டாலின்..” அண்ணாமலை சாடல்..

FotoJet 21 1

தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் அவலநிலையில் இருக்கும் போது, முதலமைச்சர் ஸ்டாலின் விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறா என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்திருந்தார்.. மேலும் பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் – சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


இந்த நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழக பாஜக முன்னாள் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மாணவர் விடுதிகளில், தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என, மாணவர்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும், இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் திமுக அரசு தெரிவித்திருந்தது.

இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், ஒரு மாணவருக்கு தினம் ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 உணவுப் படி வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள். ஒரு நாளைக்கு ரூ. 50 உணவுப் படி என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும், ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. கடந்த ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, ஐந்து மாணவிகள் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் இத்தனை அவலநிலையில் இருக்க, தனது விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..

விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 – 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 – 25 ஆண்டு விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. இந்த பெயர் மாற்ற விளம்பரத்துக்கு இன்னும் சில கோடிகள் கணக்கு காட்டலாமே தவிர, இதனால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : #Breaking : அமைச்சர் நேருவின் தம்பி மீதான சிபிஐ வழக்கு ரத்து.. ஆனா ஒரு கண்டிஷன்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

English Summary

Annamalai has criticized Chief Minister Stalin for changing the names of hostels while student hostels across Tamil Nadu are in a dire state.

RUPA

Next Post

“ பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகமான ஏஜெண்ட்..” NIA விசாரணையில் 26/11 குற்றவாளி தஹாவூர் ராணா சொன்ன பகீர் தகவல்கள்..

Mon Jul 7 , 2025
பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகமான முகவராக தான் இருந்ததாக NIA விசாரணையில் 26/11 குற்றவாளி தஹாவூர் ராணா தெரிவித்துள்ளார். 26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகமான முகவராகவும், 2008 தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. ஏப்ரல் 4 ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் நாடுகடத்தலுக்கு எதிரான மறுஆய்வு மனுவை நிராகரித்ததை அடுத்து, ஏப்ரல் 10 ஆம் […]
ranas extradition is significant for indias investigation into the 2611 attacks 111950700 16x9 1

You May Like