திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.இந்த 21 மாதகால பகுதி நேர படிப்பில் சேரும் பணிபுரிவோர் மற்றும் தொழில்முனைவோரின் வசதிக்காக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும். இளநிலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகிகளும், தொழில்முனைவோரும் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிகள் இந்தப் பாடத்திட்டத்திற்கும் பொருந்தும்.பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை பட்டப்படிப்புக்கான திட்டம் பணிபுரிவோரும், தொழில்முனைவோரும் தங்களின் பணியில் இடையூறின்றி சர்வதேச தரத்திலான எம்பிஏ பட்டம் பெறுவதற்கும் மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதாக திருச்சிராப்பள்ளி ஐஐஎம் இயக்குநர் பவன்குமார் சிங் தெரிவித்துள்ளார்.



