மாணவர்கள் டிகிரி படிப்பில் சேர்வதற்கு முன் இதை கவனிக்க வேண்டும்…! UGC கொடுத்த எச்சரிக்கை…!

UGC case 11zon

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என யுஜிசி எச்சரித்துள்ளது.


இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பட்டம், இரட்டைப் பட்டப்படிப்பு திட்டங்களின் விதிமுறைகள்- 2022 யுஜிசி-யால் 2023 டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்-2023 விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.

இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் யுஜிசி-யால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன. அந்த நிறுவனங்கள், கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு அத்தகைய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிடம் இருந்து பட்டங்கள் பெறுவதை எளிதாக்கி வருவதும் யுஜிசி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, சில தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இணைய வழியில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்குவது தொடர்பாக செய்தித் தாள்கள், சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வழங்கி வருகின்றன.

இதற்கு எந்த அனுமதியும் யுஜிசியால் வழங்கப்படவில்லை. எனவே, அத்தகைய பட்டங்களும் யுஜிசியால் அங்கீகரிக்கப்படாது. இது தவிர இத்தகைய செயல்களில் ஈடுபடும் உயர் கல்வி நிறுவனங்கள் மீது உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மருந்துப் பொருட்களுக்கு 250% வரி விதிக்கும் டிரம்ப்!. இந்திய மருந்து நிறுவனங்கள் அதிர்ச்சி!.

Wed Aug 6 , 2025
அமெரிக்கா தற்போது இந்தியாவின் மீது 25 சதவீத வரியை விதித்துள்ளது, இது (ஆகஸ்ட் 7, 2025 ) நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரியை அதிகரிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க செய்தி சேனலான CNBC-க்கு அளித்த பேட்டியில், மருந்துத் துறை மீது 250% வரி விதிப்பது குறித்து டிரம்ப் எச்சரித்தார். ‘ஆரம்பத்தில் மருந்துகளுக்கு ஒரு சிறிய வரியை விதிப்போம், […]
250 pharma india trump 11zon 1

You May Like