Subsidy: சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ரூ.1.25 லட்சம் வரை மானியம்…! முழு விவரம்…

Magalir Urimai Thogai 4 2024 06 13959d94ae85e2aed3566ce5d26fd069 1

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது.


பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் வணிகம். விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7 சதவிகிதமும் மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை 8 சதவிகிதமும் ஆகும். கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

குழுக்கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும். சுய உதவிக்குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Vignesh

Next Post

'யாராவது ஆஸ்திரேலியாவை வெல்லும் வரை'!... "இந்திய வீராங்கனைகள் உண்மையிலேயே உலகத் தரம் வாய்ந்தவர்கள்தான்"!. நியூசி. பிரதமர் பாராட்டு!

Thu Nov 6 , 2025
தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், யாராவது ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்போது நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நகைச்சுவையாகக் கூறினார். 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்துள்ளது, இந்த வெற்றியின் எதிரொலிகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக இந்திய அணியை வாழ்த்திய […]
new zealand pm

You May Like