IPL அட்டவணையில் திடீர் மாற்றம்..!! பிசிசிஐ வெளியிட்ட புதிய லிஸ்ட்..!!

கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் சீசன் 17 தொடங்கியது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2) ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். முன்னதாக நடப்பு சீசனின் ஐ.பி.எல் அட்டவணை 15 நாட்களுக்கானது மட்டுமே வெளியானது.

இந்தியாவில் தேர்தல் நடக்கும் என்கிற காரணத்தினால், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தேவைகளால், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிட்ட பிறகு, அதற்கேற்றவாறு இரண்டாவது கட்ட ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிட பிசிசிஐ முடிவு செய்திருந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி ஐ.பி.எல் சீசனில் இறுதி அட்டவணை வெளியானது. அந்த வகையில், மே 19ஆம் தேதி லீக் போட்டிகள் முடிவடையும் என்றும் இறுதிப் போட்டி மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் இந்த அட்டவணையில் இரண்டு போட்டிகளுக்கான தேதியை பிசிசிஐ மாற்றியுள்ளது. மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த தேதி மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி விளையாடுவதாக இருந்த போட்டி, ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் ஏப்ரல் 16ஆம் தேதி மோதிக் கொள்ள இருந்த போட்டி ஏப்ரல் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

Read More : பரிதாப நிலையில் ராதிகா..!! பறந்து பறந்து பிரச்சாரம் செய்யும் கேப்டன் மகன்..!! பரபரப்பில் தேர்தல் களம்..!!

Chella

Next Post

மிக்ஜாம் புயல் பாதிப்பு..!! ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ.6,000..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

Tue Apr 2 , 2024
சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு 6000 ரூபாய் வெள்ள நிவராணம் எத்தனை பேருக்கு தரப்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வீசிய மிகஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்தது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான […]

You May Like