மிக்ஜாம் புயல் பாதிப்பு..!! ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ.6,000..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு 6000 ரூபாய் வெள்ள நிவராணம் எத்தனை பேருக்கு தரப்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வீசிய மிகஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்தது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6000/ வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படியே, 6000 ரூபாய் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதேநேரம் மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு/ மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கிக் கணக்கு விவரத்துடன் தங்கள் பாதிப்புக்குரிய நியாயவிலை கடைகளில் விண்ணப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்கில் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மக்கள் வழங்கினர். சுமார் 5.5 லட்சம் பேர் 6000 நிவாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ஆயிரத்து 487 கோடி ரூபாய் நிவாரண தொகை வழங்கபட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதற்கிடையே, ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் வரவுவைக்க கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரணத் தொகையை அதிகரித்து வங்கிக் கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்யநாரயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஜனவரி மாதமே வழங்கப்பட்டு விட்டதாக கூறினார்.

மேலும், நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சம் 28 ஆயிரத்து 933 விண்ணப்பங்கள் பரீசிலனை செய்து 10 சதவீதம் என சுமார் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு 31 கோடியே 73 லட்சம் ரூபாய் என விடுபட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும், அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விவர அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை வரும் 17ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

Read More : IPL அட்டவணையில் திடீர் மாற்றம்..!! பிசிசிஐ வெளியிட்ட புதிய லிஸ்ட்..!!

Chella

Next Post

என்னது பறக்கும் கேமரா ஸ்மார்ட்போனா?.. விவோ-வின் புதிய அறிமுகம்

Tue Apr 2 , 2024
விவோ நிறுவனம் விரைவில் பறக்கும் கேமரா அம்சம் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய பறக்கும் கேமரா ஸ்மார்ட்போனின், ப்ரோட்டோடைப் மாடலை விவோ இப்போது வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. பிரத்தியேகமான மற்றும் சிறப்பான கேமரா அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமைக்குரிய விவோ நிறுவனம், இப்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில், புதிதாக பறக்கும் கேமராவை ஸ்மார்ட்போனுடன் இணைத்துள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் வருவது […]

You May Like