திடீர் உடல்நலக் குறைவு!. ஹேமந்த் சோரனின் வலதுகரம் சரிந்தது!. ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்யா குமார் அதிர்ச்சி மரணம்!. தலைவர்கள் இரங்கல்!.

Jharkhand Minister passes away 30kb

ஜார்ஜண்ட் மாநில உயர்கல்வி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சுதிவ்யா குமார் சோனு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கிரிடீ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவில் காலமானார்.


அமைச்சரின் மறைவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. “எங்களது அர்ப்பணிப்புமிக்க தோழரும், மாநில அமைச்சருமான சுதிவ்யா குமாரின் மறைவு ஜே.எம்.எம் குடும்பத்தையும், மாநில அரசையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது சேவை மற்றும் தியாகம் எப்போதும் நினைவுகூரப்படும்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

யார் இந்த சுதிவ்யா குமார் சோனு? முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகிய முக்கிய துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

கிரிடீ தொகுதியிலிருந்து 2019 மற்றும் 2024 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானவர். முதல்வர் ஹேமந்த் சோரனின் மிக நெருங்கிய ஆதரவாளராகவும், ஜே.எம்.எம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

திடீரென தரையில் மோதி நொறுங்கிய விமானம்!. 2 பேர் பரிதாப பலி! மின்சாரமும் கட்!. அமெரிக்காவில் சோகம்!

Sun Sep 6 , 2026
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். கலிஃபோர்னியாவின் வடமேற்கு ஃப்ரெஸ்னோ பகுதியில் உள்ள ‘சியரா ஸ்கை பார்க்’ (Sierra Sky Park) விமான நிலையம் அருகே, பிளைத் அவென்யூ பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சிறிய ரக விமானம் திடீரென […]
plane crash California 30kb

You May Like