திடீர் திருப்பம்..!! பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு..? NIA கிடுக்குப்பிடி விசாரணை..!!

பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரித்து வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறது. உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஷிவமோகா, பெல்லாரி சிறைச்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிவமோகா பகுதியில் இருந்து இரண்டு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்திருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று பாஜக நிர்வாகியான சாய் பிரசாத்திடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மரணம் நிச்சயம்..!! கொரோனாவை விட 100 மடங்கு பவர்ஃபுல்..!! நடுங்க வைக்கும் H5N1 வைரஸ்..!! அறிகுறிகள் என்ன..?

Chella

Next Post

கொளுத்தும் கோடை வெயில்..!! மின் நுகர்வில் புதிய உச்சம் தொட்ட தமிழ்நாடு..!!

Fri Apr 5 , 2024
தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 440.89 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவாகியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் தினசரி மின்நுகா்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தின் தினசரி மின் நுகா்வு மாா்ச் 29ஆம் தேதி 426.44 மில்லியன் யூனிட்-ஆக இருந்து வந்த நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு உயா்ந்தது. தற்போது இந்த மின்நுகர்வு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் […]

You May Like