ரவி மோகன் வழக்கில் திடீர் திருப்பம்.. சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு..!! – சென்னை ஐகோர்ட்

Ravi mohan 1 1

பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.5.9 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


திரைப்படத்திற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திருப்பி தருமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பி.லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், முதல் படத்திற்கு ஆறு கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

ஒப்பந்தப்படி தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் நடித்த போது முன்பணத்தை திருப்பி கேட்டதாகவும் அப்போது ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் முன்பணத்தை திருப்பி அளிப்பதாக ரவி மோகன் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை திருப்பிக் கொடுக்காத நிலையில் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக ரவி மோகன் வெளியிட்ட அறிவிப்பை கேட்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒப்பந்தப்படி கால்ஷீட்டுடன் தயாரிப்பு நடத்தப்படாததால் தனக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறி, அதற்கும் நட்ட ஈடாக அதே நிறுவனத்துக்கு எதிராக ரவி மோகனும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இரு மனுக்களும் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரவி மோகன் தரப்பில் வழக்கறிஞர் எஸ். கார்த்திகைபாலன், “அடுத்த படத்தில் நடிக்கும் போது பணத்தை திரும்ப அளிப்பதாக கூறியதை தயாரிப்பு நிறுவனம் ஏற்க மறுத்ததால் கால்ஷீட்டைக் பயன்படுத்தவில்லை” என்று விளக்கினார்.

தயாரிப்பு நிறுவனத்தின் பக்கம், மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன் மற்றும் விஜயன் சுப்ரமணியன், “ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தங்கள் முன்பணத்தில் தொடங்கியுள்ளார்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதையடுத்து, நீதிபதி வழக்கை மத்தியஸ்தரின் மூலம் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர ஆணையிட்டார்.

அதேசமயம், ரவி மோகன் தாக்கல் செய்த ரூ.9 கோடி இழப்பீடு மற்றும் நிறுவனத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கூடவே, ரூ.5.90 கோடி மதிப்புடைய சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அதற்கான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

Read more: நோட்…! ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் அஞ்சல் அலுவலகம் செயல்படாது…!

Next Post

சூப்பர் வாய்ப்பு... தாட்கோ மூலம் பயிற்சி...! இளைஞர்களுக்கு மாதம் ரூ.15,000 உடனே விண்ணப்பிக்கவும்...!

Thu Jul 24 , 2025
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Alde) பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் […]
tn Govt subcidy 2025

You May Like