பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்..!! சென்னை லாட்ஜில் தங்கியிருந்த குற்றவாளிகள்..!! NIA அதிர்ச்சி தகவல்..!!

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் வழக்கில் சந்தேகிக்கப்படும் 2 பேர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான சில பொருட்களும் தடயவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இந்த குண்டு சம்பவத்தின் பின்னணியில் பல மர்மங்கள் நீடித்ததால் இந்த வழக்கு பெங்களூரு காவல்துறையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, என்ஐஏ அதிகாரிகள் குண்டுவெடிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். அப்போது, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம், குறிப்பாக குற்றவாளிகள் பயன்படுத்திய தொப்பி ஒன்று மூலம் துப்பு துலங்கியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டு வைத்து சென்ற நபர் மற்றும் அதற்கு உதவியதாக கூறப்படும் நபர், கடந்த 2022இல் பெங்களூருவில் சதிச்செயலில் ஈடுபட்டதாக முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா என தெரியவந்துள்ளது. இருவரும் அப்போதே தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்து இருந்தது தெரியவந்தது. ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோர், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் முஸவீர் ஹூசைன் ஷாகிப் அணிந்து இருந்த தொப்பி சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் வாங்கியதும், வெடிகுண்டு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட தொப்பி மூலமே இந்த வழக்கில் துப்புதுலங்க உதவியாக இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவரும் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து கேரளா வழியாக தமிழகம் வந்து பிறகு சென்னை வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக விசாரணை மூலம் உறுதியாகியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : Annamalai | ”டாய்லெட் பேப்பராக திமுகவின் தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள்”..!! வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!!

Chella

Next Post

திமுக கூட்டணியில் IUML கட்சிக்கு ’ஏணி சின்னம்’ ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Sat Mar 23 , 2024
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் கூட்டணிகளின் தொகுதிப்பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. திமுக கூட்டணியில் இந்த முறையும் ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி […]

You May Like