Rahul Gandhi: “மோடி இல்ல எந்த சக்தியாலும் தமிழர்களை வீழ்த்த முடியாது”… நெல்லைப் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு.!

Rahul Gandhi: 2024 ஆம் வருட பொது தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 102 பாராளுமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி மற்ற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் இந்த கூட்டணியில் திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதிமுக உன்கிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணி சார்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் பத்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது பிரச்சார பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் வைத்து நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி(Rahul Gandhi) காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். அப்போது பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி தமிழர்களை மோடி மட்டுமல்ல எந்த சக்தியாலும் வெல்ல முடியாது எனக் கூறினார்.

இந்தியாவிற்கே சமூக நீதியை எப்படி நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்நாடு தான் சொல்லித் தருகிறது என பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். இதன் காரணமாகத்தான் தனது ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் .

Read More: PM MUDHRA YOJANA | மத்திய அரசின் ரூ.10 லட்சம் தொழில் கடன்.! விண்ணப்பிப்பது எப்படி.?

Next Post

அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்- வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

Fri Apr 12 , 2024
மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஈரான் […]

You May Like