திடீர் ட்விஸ்ட்..! விசில் இல்லை.. டிவி சின்னத்திற்கு ஓட்டு போடுங்க.. சுயேச்சைக்கு விஜய் ஆதரவு..!

Tvk Vijay edapadi candidate 2

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.. அந்த வகையில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை விஜய் அறிவித்தார்.. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு அருண்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. அவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.. இதனால் எடப்பாடி தொகுதியில் இருந்து தவெக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.. அதாவது எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் இல்லை..


இந்த நிலையில் எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளரை தவெக ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான்.

எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அறிவித்துள்ளதா? உண்மை என்ன..?

RUPA

Next Post

கோடைக்காலத்தில் தினமும் இளநீர் குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா..?

Sun Apr 19 , 2026
கோடைக்காலம் தொடங்கியவுடன், இளநீருக்கான தேவை பெருமளவில் அதிகரிக்கிறது. கடும் வெயிலில் பலர் குளிர்ச்சியான இளநீரைக் குடிக்க விரும்புகிறார்கள். ஏனெனில், இளநீர் ஒரு புத்துணர்ச்சியூட்டும் கோடைக்கால பானம் மட்டுமல்ல, அதைக் குடிப்பதால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. நீங்கள் 30 நாட்களுக்குத் தொடர்ந்து இளநீர் குடித்தால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். சிறந்த நீரேற்றம்: இளநீரில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற […]
benefits of tender coconut water 1

You May Like