கரையோர மக்களுக்கு திடீர் எச்சரிக்கை..!! பாதுகாப்பா இருங்க..!! மாவட்ட ஆட்சியர் பரபரப்பு அறிக்கை..!!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விடுத்துள்ள அறிக்கையில், “கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதனப் பொருள்களை கவனத்துடன் கையாள வேண்டும். மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, கரையோரப் பகுதிகளுக்குச் செல்லவோ வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல், நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Chella

Next Post

இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு..!! சீறிப்பாயும் காளையும்..!! காண குவிந்த மக்கள்..!!

Sat Jan 6 , 2024
இலங்கை நாட்டில் முதல்முறையாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் நடக்கும். மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகெங்கும் புகழ்பெற்றவை. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூட மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்கப் பார்வையாளர்கள் குவிவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்துள்ள தச்சங்குறிச்சி என்ற […]

You May Like