கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; “கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 2025 மாதத்திற்கான சிறிய அளவிளான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் நடக்கிறது.
இம்முகாமிற்கு பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு பல்வேறு பணிக் காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை அப்போதே வழங்கப்படும்.
இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை நாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in http://www.tnprivatejobs.tn.gov.in/மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.