தமிழ்நாட்டில் மக்களின் பொருளாதார தகுதிக்கு ஏற்ப 5 வகை குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. தற்போது தமிழக அரசு ரேஷன் கார்டுக்கு புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டு என்பது ஏழை மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் குடும்ப அட்டையாகும். இதை வைத்து அரசு தரப்பிலிருந்து அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசின் மற்ற திட்டங்கள் மூலமாகவும் உதவி கிடைக்கிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பலன் பெறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கார்டு தொடர்பான புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டையின் வகையை தகுந்த ஆவணங்களுடன் மாற்றிக் கொள்ள மக்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 வகை ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. அவை:
- அந்தியோதயா அன்ன யோஜனா (AAY)
- முன்னுரிமை குடும்ப அட்டை (PHH)
- முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (NPHH)
- சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S)
- பொருளில்லா அட்டை (NPHH-NC)
யார் எந்த சலுகை பெறுகிறார்கள்?
* AAY ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் 35 கிலோ அரிசி வரை விநியோகம் செய்யப்படுகிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களாக கருதப்பட்டு அரசின் திட்டங்களிலும் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். தவிர நியாயவிலைக் கடையில் அரசு சார்பில் கொடுக்கப்படும் அனைத்து பொருட்களும் பெறத் தகுதியானவர்கள்.
* PHH ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அரிசி, கோதுமை, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பெறுகிறார்கள்.
* NPHH குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு, குறைந்த அளவிலான சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
* NPHH-S கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, கோதுமை எல்லாம் கிடைக்காது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் என்றால் இந்த கார்டை விருப்பமாக பெற்றுக் கொள்ளலாம். அரசின் பிற திட்டங்களில் மானியம் எல்லாம் கிடைக்காது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், தங்கள் அட்டையை மாற்றிக் கொள்வதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெறலாம். அரசின் அறிவிப்பு படி, தகுதியானவர்கள் தங்கள் குடும்ப அட்டையை மாற்ற விரும்பினால், தேவையான ஆவணங்களுடன் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமிற்கு சென்று விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உடனடியாக அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read more: மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் ரூ.8 லட்சம் கிடைக்கும்.. அட்டகாசமான போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்..!!