உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் நீதிபதிகள் சொத்து விவரங்களைப் பதிவேற்றுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய சட்ட ஆணையத்தின் அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு /செயல்படுத்தலுக்காகவும் விரைவான நடவடிக்கைகளுக்காகவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுக்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அனுப்புகிறது. இந்த அறிக்கைகளை செயல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டையும் அமைச்சகம் கோருகிறது. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலுவையில் உள்ள சட்ட ஆணைய அறிக்கைகளின் நிலையைக் காட்டும் அறிக்கையை அமைச்சகம் ஆண்டுதோறும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
தற்போது, இந்திய சட்ட ஆணையத்தில் 2 சட்ட அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கூடுதலாக, அவ்வப்போது சட்ட ஆராய்ச்சிப் பணிக்காக பல சட்ட ஆலோசகர்கள் இந்திய சட்ட ஆணையத்தால் பணியமர்த்தப்படுகின்றனர்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொத்து அறிக்கையை உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் பதிவேற்றுவதன் மூலம் பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும் என்று 2025, ஏப்ரல் 1 அன்று உச்ச நீதிமன்றத்தின் முழு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
நீதிபதிகள் பதவியேற்கும் போதும், கணிசமான அளவு சொத்துக்கள் பெறப்படும் போதும், தலைமை நீதிபதியிடம் தங்கள் சொத்து பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதில் இந்திய தலைமை நீதிபதியின் அறிவிப்புகளும் அடங்கும். சொத்துக்களின் அறிவிப்பை உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் வெளியிடுவது கட்டாயமாகும்.



