வீட்டிலேயே கிளிசரின் போட்டு வந்துட்டீங்களா.? கேப்டன் நினைவிடத்தில் அழுத சூர்யா.! பங்கமாக கலாய்த்த பயில்வான் ரங்கநாதன்.!

தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை உருவாக்கியவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். இவர் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் இவரது இறப்பை தொடர்ந்து திரையுலகினர் அரசியல் பிரமுகர்கள் தேமுதிக கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் என பல லட்சக்கணக்கானோர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

அவரது உடல் தேமுதிக அலுவலகத்திற்கு அருகிலேயே அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் மறைந்து ஒரு வார காலம் ஆகியும் நினைவிடத்திற்கு திரைத்துறை பிரபலங்களும் பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சூர்யா அவரது நினைவிடத்தில் அமர்ந்து திரும்பி திரும்பி அழுது வீடியோ வெளியாகியது.

இந்நிலையில் சூரிய அழுதது வரும் நடிப்புதான் அதில் உண்மையான உணர்வு எதுவும் இல்லை என நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் நடிகர் சூர்யா அவரது தந்தை சிவகுமார் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோருடன் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் திரும்பி திரும்பி அழுதார். அது எல்லாம் நாடகம் தான்.

என்ன சூர்யா வீட்டில் இருந்து வரும் போது கிளிசரின் போட்டுட்டு வந்துட்டீங்களா.? எனவும் சர்ச்சையாக கேள்வி எழுப்பினார் பயில்வான் ரங்கநாதன். மேலும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்றால் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்படுவோம் என்ற பயத்தில் தான் சிவக்குமார் தனது இரண்டு மகன்களையும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு அழைத்து வந்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். சூர்யாவின் திருமணத்திற்கு ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அழைக்கப்பட்டிருந்ததால் விஜயகாந்த் வரவில்லை என தெரிவித்த பதில் ரங்கநாதன் அவரது திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து வீட்டிற்கு சென்று வாழ்த்தியவர் விஜயகாந்த் எனவும் தெரிவித்திருக்கிறார். இவரது பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

மீண்டும் வருகிறது கனமழை.! சென்னை மற்றும் தென் மாவட்டங்களை தாக்க அதிக வாய்ப்பு.! வானிலை அறிக்கை.!

Sun Jan 7 , 2024
கடந்த வருடத்தின் இறுதி மாதத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய பகுதிகள் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதிகளையும் கனமழை புரட்டி எடுத்தது. இந்த மழை காரணமாக பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இந்தப் புயல் மற்றும் கனமழை பதித்த பகுதிகளுக்கு தமிழக […]

You May Like