என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை வெளியிட்டு வந்தார்.. அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலையில் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர் பாலு வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு டி.ஆர் பாலு ஆஜரானார்.. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது செய்தியாளர் ஒருவர் “2004-ம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009-ல் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.. அப்போது போகாத மானம், திமுக பைல்ஸ் மூலம் டி.ஆர் பாலுவுக்கு மானம் போய்விட்டதா என கூறியுள்ளார்..
அதற்கு டி.ஆர். பாலு, உங்களை அந்த மாதிரி கேட்க சொன்னாரா என்று கேட்டார்.. அதற்கு செய்தியாளர் பேட்டியே கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார். அப்போது டி.ஆர் பாலு பேட்டி கொடுத்திருக்காரா? சரி அதற்கு பதில் சொல்றேன்.. சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன்.. நீங்க கேட்கலைல இது என்று கேட்டார்..
அதற்கு செய்தியாளர் அண்ணாமலை சொன்னதை தான் கேட்கிறேன்.. என்று கூற உடனே டி.ஆர் பாலு எந்த இடியட் சொன்னாலும், நீங்கள் கேட்கலைல என்று கோபமாக கேட்டார்.. அதற்கு செய்தியாளர் நான் கேட்கல.. அண்ணாமலை கூறியதை நான் கேட்கிறேன் என்று கூறினார்.. அண்ணாமலை சொல்லும் போது நான் பதில் சொல்கிறேன்.. மேலும் ரூ.10,000 கோடி சொத்து குறித்த செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்ற போது, போய்யா என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
Read More : திமுக மூத்த தலைவர்.. முன்னாள் MLA காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!



