தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்கள் கூடியிருந்த பொழுதுபோக்கு மையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 27 பேர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர். இரு சம்பவங்களிலும் துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்குப் பகுதியில் உள்ள வெடேலா டவுன்ஷிப்பில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு இதில் அதிக உயிரிழப்பை […]